முஸ்லிமின் அடிப்படைக்கடமை | Muslimin Adippadaikkadamai
₹15.00
5 in stock
Description
முஸ்லிமின் அடிப்படைக் கடமை என்னும் சிந்தனையைக் கிளறும் – இறைநம்பிக்கைக்கு உரமூட்டும் நன்னூலை தமிழ் கூறு நல்லுலகிற்குச் சமர்ப்பிக்கும் அரிய வாய்ப்பை அருளிய வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும் நவீன உலகின் இஸ்லாமிய சிந்தனையாளர் மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் நாள் லாஹூர் மாவட்டத்தைச் சார்ந்த முராத்பூர் நகரில் ஆற்றிய உரைதான் இந்நூல். இது மௌலானா அவர்களின் ஒரு சிறந்த முக்கியத்துவமிக்கப் பேருரையாகும் இதில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்பு கள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல் வேறுபட்ட ஆபத்துகள். துன்பங்கள் ஆகியவற்றால் சூழப் பட்டிருப்பதற்கான ஒரே காரணம். அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனத்தில் பதியும்படி மௌலானா அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |