நிறவெறியை குத்தி வீழ்த்திய வித்தகன் | Niraveriyai Kuththi Veezhthiya Vithagan
₹15.00
10 in stock
Description
உலகெங்கும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடிக்கும் அத்தனை உரிமைப் போராளிகளுக்கும் அலீ ஓர் ஆதர்ச புருஷன்.விளையாட்டு அபிமானிகளுக்கு அவர் வீரத்தின் பிரதி பிம்பம் அவரை யார் நினைவில் வைத்திருக்கிறார்களோ இல்லையோ அமெரிக்காவில் ஃபீனிக்ஸ் நகரில் அவர் ஏற்படுத்தியுள்ள முஹம்மது அலீ பார்க்கின்சன் சிகிச்சை மையம், அவரது புகழை என்றென்றைக்கும் பறை சாற்றிக் கொண்டே இருக்கும் எத்தனை பேருக்கு தெரியும் கேசியஸ் கிளே யார் என்று? ஆனால் எல்லோருக்குமே தெரியுமே முஹம்மது அலியார் என்று. அந்தப் பெயருக்கு பின்னால் இருக்கும் சமூக விடுதலைப் போராட்டத்தை அறியாமல் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது.
நான்கு புறமும் கயிறு கட்டிய மேடையில் அலி விட்ட குத்துக்களை மட்டும் புகழ்வது வரலாற்றை பூசி மெழுகுவதாகும்.
பரந்து விரிந்த இந்த சமூகம் என்ற மேடையில் ஒடுக்குமுறைக்கு எதிராக முஹம்மது அலீ விட்ட குத்துக்களை நினைவுகூர்வதுதான் அவரது மரபைப் போற்றுவதாகும்.
முஹம்மது அலி அவர்கள் குத்துச்சண்டை ஜாம்பவான் என்பதை கடந்து, இன விடுதலைக்கான போராளிகள் அவர் இருந்தார் என்பதும், அதற்கான சுதந்திர சிந்தனையும் உத்வேகத்தையும் அவர் சார்ந்திருந்த இஸ்லாம் வழங்கியது என்பதும் உரத்துச் சொல்லப்பட வேண்டிய உண்மை.
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | அப்துல் ஜப்பார், குதுப்தீன், முனைவர் அப்துல் சமது |