ஜின்கள் ஓர்ஆய்வு | Jinngal Oor Aaivu
₹20.00
16 in stock
Description
பொதுவாக சமூகத்தின் மத்தியில் யாராவது சாதாரண நிலையிலிருந்து திடீரென அசாதாரண நிலைக்கு மாறிவிட்டால் பேய் பிடித்து விட்டது. அல்லது ஜின் பிடித்துவிட்டது என்று முடிவு கட்டுபவர்கள் பலர் உள்ளனர்.மரணத்திற்குப்பின் எந்த ஒரு ஆத்மாவும் இவ்வுலகிற்குத் திரும்பி வராது, யாரையும் பிடித்தாட்டாது என்று முஸ்லிம்கள் தெளிவாக நம்பினாலும், அவர்களில் சிலர் ஜின்கள் பிடித்தாட்டும் என்று நம்புபவர்களாக உள்ளனர். இன்னும் ஒரு சிலரோ ஜின்களை வசப்படுத்த முடியும் அவைகளைக் கொண்டு நன்மையான தீமையான காரியங்களைச் செய்யலாம் என்று நம்புபவர்களாகவும் உள்ளனர். இத்தகைய விஷயங்களில் மார்க்க அறிஞர்கள் மத்தியில் கூட கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜின்கள் குறித்தும், அதனால் பிடித்தாட்டப்படுவதாகக் கருதப்படும் நோய்கள் குறித்தும் ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். ஜின்கள் பற்றியா எழுதப் போகின் நீங்கள், அது விபரீதமாகிவிடக் கூடாது என்று அறிவுரை கூறியவர் களும் உண்டு
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | அபூ ஆசியா |