உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாதவரை… | ungalai Neengalae Maatri Kolladhavarai
₹200.00
3 in stock
Description
நற்பண்புகளால் பட்டை தீட்டப்பட்ட சமூகம் பண்பட்ட சமூகமாக இருக்க முடியும். இன்றைய தலைமுறையினர் தலையாய பிரச்னையே பண்பாட்டு வீழ்ச்சிதான் நாகரிகத்தை நாகரிகமாக இருக்கும், பாவத்தை கூட பாவமாகப் பார்ப்பதில்லை. எல்லாமே மரத்துவிட்டது விழியற்றோர் வழிதவறிச் செல்வதைப் போன்று. சிறந்த வழிகாட்டுதல் இருந்தும் முதுகுக்குப்பின் அதனை வீசிவிட்டு அலட்சியத்துடன் வேறு திசை நோக்கி நடை போடுகிறார் மார்க்க நெறியில் பண்பாட்டுப் பயணம் புறப்பட தயங்குகிறோம் இஸ்லாம் என்பதை வணக்க வழிபாடுகளுடனும், ஆராதனை களுடனும் நிறுத்திக்கொண்டேன் அல்குர்ஆனிலிருந்து அண்ணல் நபி (ஸல்) வாழ்விலிருந்தோ ஆதாரங்களைத் தேடுவதாக இருந்தால்கூட, வணக்க வழிபாடுகளில் மட்டுமே தேடுகின்றோம். இஸ்லாம் கூறும் வசந்த வாழ்விற்கு உகந்த வழிகள் இருக்கின்றனவா என்றோ, அன்றாட வாழ்வில் இஸ்லாம் போதிக்கும் நன்னடத்தை என்னவென்றோ அறிந்து கொள்ள ஆவலும் கொள்வதில்லை. தெரிந்து கொள்ள முயலுவதும் இல்லை ஆகவேதான் எத்தனையோ நல்ல வணக்கசாலிகள், மார்க்க அடையாளங்களை ஆடையிலும் உருவத்திலும் நிலைநிறுத்து வர்கள் பழக்க வழக்கங்களில் வீழ்ச்சி கண்டவர்களாக இருக்கின் றனர். மார்க்கம் என்றால் வழிபாடுகள் மட்டுமே என்ற தவறான கண்ணோட்டமும் இதற்கு ஒரு காரணம்.
Additional information
Weight | 335 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலவி நூஹ் மஹ்ழரி |