இதழியல் வரலாற்றில் சமரசம் | Idhazhiyal Varalatril Samarasam
₹150.00
8 in stock
Description
சமரசம் இதழ் இந்தப் பூமியில் பிறந்து விழுந்த அந்தத் தருணம் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகள் தமிழக முஸ்லிம்களின் மார்க்க வரலாற்றிலும் சமுதாய வரலாற்றில் திருப்பு முனைகள் ஏற்பட்ட காலக் கட்டமாகும். கண்ணைக் கட்டி விட்டது போல ஒரு குறிப்பிட்ட வழித்தடத்திலேயே சென்றுகொண்டிருந்த தமிழக முஸ்லிம்களின் ‘கண்கட்டுகள் அவிழ்க்கப்பட்ட காலக்கட்டம் அது. மரபுசார்ந்த இஸ்லாம் மதத்தை அறிவு சார்ந்த வாழ்வியல் நெறியாக’ அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் சமரசத்திற்கு முக்கிய பங்கு முதன்மைப் பங்கு உண்டு பல்வேறு வரலாற்று, சமூகக் காரணங்களால் முஸ்லிம்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாதாரும் இஸ்லாத்தைத் தவறாகவே புரிந்து வைத்திருந்தார்கள்; அல்லது அரைகுறையாக அறிந்து வைத்திருந்தார்கள். இருதரப்பினருக்குமே சரியான இஸ்லாத்தை எடுத்துரைக்க வேண்டிய தேவை இருந்தது ஒருபுறம், அலட்சியத்தில் மூழ்கியிருந்த முஸ்லிம்களைத் தட்டியெழுப்பி, அவர்களின் வாழ்வியல் குறிக்கோளை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது; மறுபுறம் முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் காணப்பட்ட இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களையும் தவறான கருத்துகளையும்களைய வேண்டியிருந்தது.
Additional information
Weight | 330 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மு.இ. அகமது மரைக்காயர் |