அண்ணல் நபி | Annal Nabi
₹22.00
8 in stock
Description
அண்ணலாரின் அறவாழ்வு நம் அன்புக் குழந்தைகள் அறிந்து கொள்ளும் வகையில் அமுதத் தமிழில் நூல் ஒன்றை ஆக்கி வெளியிட வேண்டும்’ எனும் தேவையை அடிப்படை யாகக் கொண்டு அரும்பிய இந்த ஆவலை செயலாற்றிட முனைந்தபோது மௌலானா அஃப்ஸல் ஹுஸைன் அவர்க ளின் இந்த சிறு நூல் தென்பட்டது. கல்வித் துறையில் பல பதவிகளை வகித்து அரும்பணியாற்றிப் பல சாதனைகளைப் புரிந்துள்ள இந்நூலாசிரியர் இதனை எளிய உர்துவில் இனிய நடையில் எழுதியுள்ளார். குழந்தை இலக்கியத்தில் பல நூல் களை எழுதிப் பெயர் பெற்ற இப் பெருந்தகையாளர் பெருமா யார் பெருவாழ்வும் இஸ்லாத்தின் இனிய கோட்பாடுக ளையும், செயல் முறைகளையும் விளக்கி எழுதியுள்ள நூல் கள் இன்றும் கூட பல பள்ளிக்கூடங்களின் பாடத்திட்டங்க ளில் இடம் பெற்றுள்ளன அண்ணலாரின் திருவாழ்வை எடுத்துரைக்கும் இந்நூல் இதுவரை 50,000 பிரதிகளுக்கு மேல் உருது மொழியில் அச்சி டப்பட்டு வெளியாகியுள்ளது. வேறு பல மொழிகளிலும் இந் நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை இயன்றவரை யில் எளிய தமிழில் – எழில் நடையில் கொண்டு வர முயற்சி செய்திருக்கின்றோம். நம் அன்புச் சிறார்களுக்கு இதனைப் படிக்கக் கொடுத்து, அவர்களின் பிஞ்சு உள்ளங்களில் அண் ணல் நபியின் அருள் வாழ்வைப் பதிய வைத்து, அண்ணலா ரின் அருங்குணங்களைப் பின்பற்றும் ஆவலை விதைத்திட அனைவரும் முன் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா அஃப்ஸல் ஹீசைன் |