ஹாஷிம்புரா மே 22 | Hashimpura May 22
₹120.00
5 in stock
Description
ஹாஷிம்புரா சம்பவம் அரசாங்கத்தின் படையை காட்டுமிராண்டித்தனமாக இரக்கமற்ற வகையில் பயன்படுத்தியதற்கான அவலமான அலறலை எழுப்பக் கூடிய சம்பவமாக இருக்கிறது.
இது கொலைகாரர்களான தனது படையணி ஆட்களுக்காக பொய்யைக் கூறும் நெறி தவறிய முதுகெலும்பற்ற ஓர் அரசாங்கத்திற்கான உதாரணம். சம்பவம் நிகழ்ந்த முறையே இதற்குப் போதுமானது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆயுதப் படையணியின் ஒரு குழுவினர், எல்லோரும் பார்த்திருக்க வெளிப்படையான வகையில் கூடியிருந்த மக்கள் 500 பேரிலிருந்து இளைஞர்களான தேர்வு செய்து, அரசாங்கத்தின் போலீஸ் டிரக்கில் ஏற்றிக் கொண்டு தண்ணீர் ஓடும் கால்வாய்க்கருகில் கொண்டு செல்கிறார்கள்.
பின் அவர்களை ஒவ்வொருவராக சுட்டுக் கொன்று ஓடும் கால்வாய் நீரில் எறிகிறார்கள். பின் அவர்கள் தங்கள் வாகனத்தின் மீது தாவி ஏறி, தங்கள் முகாமை அடைந்து தொந்தரவுகளேதுமற்ற உறக்கத்தில் ஆள்கிறார்கள்.
Additional information
Weight | 200 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | யூசுஃப் ராஜா |