ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்
₹100.00
2 in stock
Description
ஃபலஸ்தீனின் சமகால வரலாற்றை படித்து வந்த நாட்களில் ஷேக் அகமது யாசின் அவர்கள் குறித்துதான் அதிகமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வரலாற்றில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்த சம்பவத்தில் ஒரு துணை குறிப்பாக காலித் மிஷ்அல் என்ற பெயர் வந்தது. மொஸாத் உளவுத்துறையினர் காலித் மிஷ்அல் மீது தாக்குதல் நடத்தி அதில் தோல்வியடைந்தனர். அந்த மொஸாத் படையினரின் விடுதலைக்கு பகரமாக ஷேக் யாசின் உள்ளிட்டோர் இஸ்ரேலால் விடுதலை செய்யப்பட்டனர் என்ற செய்தி மட்டும் அதில் பதிக்கப்பட்டிருந்தது ஃபலஸ்தீன சமகால போராட்டம் குறித்தோ இயக்கங்கள் குறித்தோ தமிழில் புத்தகங்கள் இல்லாதது மிகப்பெரும் குறைதான். (சில வருடங்களுக்கு முன் ஷேக் யாசின் அவர்கள் குறித்து இலங்கையில் ஒரு புத்தகம் வெளிவந்தது) அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் இருந்துதான் காலித் மிஷ்அல் குறித்து அறிய முடிந்தது.
2006தேர்தல்களில் ஹமாஸ் வெற்றியை அடைந்த பிறகு இந்த பெயர் இன்னும் பிரபல்யம் ஆனது. இச்சூழலில்தான் மலையாள நாளிதழான கல்ஃப் தேஜஸ் காலித் மிஷ்அலை பேட்டி கண்டது. அதன் தமிழாக்கத்தை விடியல் வெள்ளி மாத இதழில் 2012 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியிட்டோம். அச்சமயம் காலித் மிஷ்அல் காஸா பிரதேசத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம் ஒன்றை மேற்கொண்டார் இது ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டது. 1997ல் காலித் மீது மொஸாத் நடத்திய தாக்குதலும் அவரின் காஸா பயணமும் அவரை குறித்து படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து கொள்வதற்குதான் முதலில் முயற்சித்தேன்.
Additional information
Weight | 175 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | B.ரியாஸ் அஹமது |