ஹஜ் உம்றா வழி முறைகள் பிரார்த்தனைகள் | Haj Umrah Vazhi Muraigal Prarthanaigal
₹30.00
10 in stock
Description
ஹஜ் இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும் ஹஜ்ஜின் தத்துவங்களை விளக்கும் வகையில் ‘ஹஜ் – ஒரு விளக்கம்’ எனும் நூலை நாம் முன்பு வெளியிட்டிருந்தோம் அதனைப் படித்த நேயர்கள், ‘ஹஜ்ஜின் தத்துவங்களைப் புரிந்து கொள்ள உதவும் சிறந்த நூலாக இது திகழ்கிறது இதேபோல், ஹஜ்ஜின் கிரியைகளைச் சுருக்கமாக விளக்கும் நூல் ஒன்றையும் வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்கள்.அத்தகைய ஆதாரப் பூர்வமான நூல் ஒன்றை ளியிட வேண்டும் என்று நாம் திட்டமிட்டிருந்தோம். இதற்கிடையில் மதீனாப் பல்கலைக் கழகம் ஹஜ்ஜின் செயல்முறைகளை மிகச் சுருக்கமாக, தெளிவாக விளக்கும் நூல் ஒன்றை அரபியிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டது அதனை பேராசிரியர் டாக்டர் V. அப்துர் ரஹீம் ஸாஹிப் தொகுத்திருந்தார். அந்நூல், நாம் ஏற்கனவே நாடியிருந்த திட்டத்துக்கு மிக ஏற்றதாகவும் பொருத்தமாகவும் அமைந்தி ருந்தது. எனவே அதனைத் தமிழில் வெளியிட்டுள்ளோம். தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு குறிப்பாக ஹஜ்ஜை நிறைவேற்ற விரும்பும் ஹாஜிகளுக்கு இந்நூல் மிகவும் உறுதுணையாக விளங்கும்.
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | V. அப்துர் ரஹீம் |