ஷேக் அப்துல் காதிர் ஜுலானி
₹30.00
13 in stock
Description
அகிலம் முழுவதையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் அவனுடைய திருத்தூதர் முஹம்மத் (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக இஸ்லாத்தின் வரலாற்றில், முழு ஊக்கத்துடனும் வாய்மையுடனும் சீர்திருத்த சேவையாற்றிய மாமனிதர் களாம் இறைவன் வகுத்தளித்த வாழ்க்கைநெறி உலகெங்கும் பரவுவதற்கும் அதன் அடிப்படைக் கொள்கை – கோட்பாடுகள் பாதுகாக்கப்படுவதற்கும் மிக மிக முக்கியக் காரணமாய் விளங்குகிறார்கள். அவர்கள் தாம் இஸ்லாத்திற்கு எதிரான அசத்திய வாதங்களைச் செயலிழக்கச் செய்தார்கள், அநாச்சாரங் களையும் கண்முடித்தனமான சடங்குகளையும் எதிர்த் துக் குரல் எழுப்பினார்கள்; இஸ்லாத்தின் தலையாய கோட்பாடுகளுக்கு நேரவிருந்த உருமாற்றங்கள் கருத்துத் திரிபுகள் ஆகியவற்றின் முகத்திரைகளைக் கிழித்து எறிந்தார்கள் உலகாயத வாதத்துக்கும் மன இச்சையைப் பின்பற்றும் போக்கிற்கும் மரண அடி கொடுத்தார்கள் இத்தகைய சீர்திருத்தவாதிகளுள் மாமேதை ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
Additional information
Weight | 70 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா அபுல் ஹஸன் அலீ நத்வி |