ஷியா கொள்கையிலிருந்து மீட்சி | Shiha Kolgaiyilirundhu Meetchi
₹10.00
5 in stock
Description
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் அருளிய இஸ்லாமிய மார்க்கம் அண்ணலார் மறைவுக்குப் பின் சில பிளவுகளைச் சந்தித்தது. அந்தப் பிளவுகள் அல்லது பிரிவுகளில் முக்கிய பிரிவாகவும்,கணிசமான எண்ணிக்கையிலும் உள்ள பிரிவு ‘ஷியா’ எனும் பிரிவாகும்.இப்பிரி வினர் தமது கொள்கையை நிலைநாட்டி ஆட்சி செலுத்தும் நாடாக ஈரான் என்ற ஒரு நாடே உள்ளது. இத்தகைய வலுவான பிரிவாக உள்ள இப்பிரிவினர் முஸ்லிம்களில் உள்ள ஒரு பிரிவினரே என்ற அந்தஸ்தில் உள்ளனர். இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகளாக சுன்னி, ஷியா என்ற இரு பிரிவுகளே குறிப்பிடத்தக்கதாக உள்ளன. ஆனால் இவ்விரு பிரிவுகளில் எப்பிரிவு சத்திய இஸ்லாமிய கொள்கையை அடியொற்றி அமையப் பெற்றுள்ளது என்ற விவாதங்களெல்லாம் ஒரு கால கட்டத்தில் ஓங்கி ஒலித்து, தற்போது அமைதி நிலவுவதாகக் காட்சியளிக்கிறது. இருப் பினும் கொள்கையளவிலான வேறுபாட்டுர்வு இருக்கவே செய்கிறது இன்னும் முஸ்லிம்கள் என்ற சகோதரத்துவ உணர்வு மறையவில்லை.’ஷியா’ எனும் பிரிவு ஏற்பட்டதன் காரணம், நோக்கம், வரலாறு போன்றவற்றை ‘சுன்னி’ பிரிவினர் தெரிந்து கொள்ளவும், ‘ஷியா பிரிவின் நோக்கமும், காரணமும் சரியானதுதானா என்பதை அறிந்து கொள்ளவும் இந்நூல் உதவும் என நம்புகிறேன்.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | Furqan Publications Trust |
Author Name | Er.H.அப்துஸ் ஸமத் |