ஷாஹின்பாக் | Shayinbak
₹50.00
Out of stock
Email when stock available
Description
வெளிப்படையான மதப் பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கூடிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய ஒரு போராட்ட வரலாற்றின் கதையை எதிர்காலத்திலிருந்து பின்னோக்கிப் பார்த்து விவரிக்கிற இந்நாவலை இஸ்லாமிய இலக்கியப் பரப்பில் வெளிவந்த ஒரு முக்கிய பங்களிப்பாகப் பார்க்கிறேன் எதிர்வரும் தலைமுறை ஷாஹீன் போராட்டம் குறித்தும் அதன் வலிகள் தியாகங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும்படியான ஓர் ஆவணமாக வெளிப்பட்டிருக்கிறது நாவலின் மையப்பாத்திரமான கண்ணும்மா பெத்தம்மாவின் மொழியைப் போலவே எளிமையான மொழி நடையும் பாசாங்கற்ற கதை சொல்லலும் நாவலின் சிறப்பு அது ஒரு வரலாறு தன்னைத் தானே எழுதிக்கொண்டது போன்ற உணர்வைத் தருகிறது ஜமீலுக்கும் காதர் மீராவுக்குமான காதல் உறவு ஒரு நல்ல ஈரானிய சினிமா போன்ற சினிமாவுக்கான கருப்பொருளைக் கொண்டது மீரா போன்ற ஒரு பெண் கதாபாத்திரத்தை எழுதிய அமீனை இந்நேரத்தில் ஆரத்தழுவிக் கொள்கிறேன் இலக்கியம் சினிமாக்களில் அப்படியான பெண்களைப் பற்றிய பதிவுகள் தவறுகிற உளவியலைக்குறித்து பல முறை யோசித்ததும் உண்டு நம் நினைவுகளிலிருந்து அகலாமல் தங்கி விடக்கூடிய இப்படியான ஒரு பிம்பம் ஒரு நாவலிலோ சினிமாவிலோ அமைந்து விடுவது படைப்பின் வெற்றி அதை இந்த நாவல் சாதித்திருக்கிறது
Additional information
Publisher | ரஹ்மத் பதிப்பகம் |
---|---|
Author Name | வி.எஸ். முஹம்மத் அமீன் |