ஷர்ஹுஸ் ஸுன்னா | Sharhus Sunnah
₹160.00
1 in stock
Description
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் நன்றிகளும் ஸலவாத்தும் ஸலமும் நமது தூதர் மீதும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் தோழர்கள் மீதும் நிலவட்டும் அஹ்லுஸ் ஸுன்னாவின் தெளிவான சரியான கொள்கை நூல்களை தமிழ் உலகிற்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை வெளியிடுகின்றோம் இன்னும் பெரிய இமாம்களின் நூல்களை தொடர்ந்து வெளியிட அல்லாஹ் உதவி செய்வானாக இமாம் பர்பஹாரியின் இந்த நூலை நீண்ட காலத்திற்கு முன்னர் தாருல் ஹுதாவில் சிறப்பு வகுப்பாக மாணவர்களுக்கு நடத்தினோம் பல் மாணவர்கள் பயன்பெற்றார்கள் அந்த வகுப்பு Youtube வலைத்தளத்திலும் பரப்பப்பட்டுள்ளது இன்றுவரை மாணவர்கள் அதன்மூலம் பலன் பெற்று வருகின்றார்கள் மேலும் அதை மொழிபெயர்த்து நூலாக வெளியிட அல்லாஹ் இப்போது எங்களுக்கு அருள் புரிந்தான் அல்ஹம்து லில்லாஹ் இந்த நூலில் இமாம் கூறுகின்ற குறிப்புகளுக்கு அவற்றை வகைப்படுத்தி நாம் தலைப்புகள் கொடுத்தோம் இன்னும் அந்த குறிப்பு அல்லது குறிப்புகளில் இருந்து நாம் கற்க வேண்டிய படிப்பினைகளை தெளிவுப்படுத்தி இருக்கின்றோம்41 இது பொதுவான வாசகர்களுக்கு நற்பலன் தரும் என்று ஆதரவு வைக்கின்றோம இந்நூலில் இடம்பெற்றுள்ள மார்க்க அறிஞர்கள் இன்னும் வழிகெட்ட கொள்கையை சேர்ந்த சிலர் ஆகியோரின் சிறு வரலாறு குறிப்புகளை இன் ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் இணைத்து வெளியிடுவோம் எங்கள் குறைகளை அல்லாஹ் மன்னிப்பானாக இதில் நன்மைகள் இருந்தால் அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்துள்ளதாகும்
Additional information
Weight | 395 g |
---|---|
Publisher | ரஹ்மத் பதிப்பகம் |
Author Name | உமர் ஷரீஃப் இப்னு அப்துல் ஸலாம் |