வேண்டாம் மரண தண்டனை ஏன்? | Vendam Marana Dhandanai – Yaen?
₹50.00
2 in stock
Description
மரண தண்டனை கூடாது என ஒரு முஸ்லிம் எப்படி கூறலாம்? இது இஸ்லாத்திற்கு எதிரானது இல்லை? என வாதிடலாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் நடப்பது இஸ்லாமிய ஆட்சியும் அல்ல! இந்திய குற்றவியல் சட்டங்கள் ஷரீஅத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையும் அல்ல.
இஸ்லாம் குற்றவியல் சட்டங்களை கண்மூடித்தனமாக செயல்படுத்தும் மார்க்கம் அல்ல. சமூகச் சூழல்களை வைத்தே அச்சட்டங்கள் அமல்படுத்தப் படுகின்றன.
தற்போது இந்திய தேசத்தில் நிலவி வரும் சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் ஆளும் வர்க்கத்தின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றச் பாடல்கள் நிரூபிக்கப்படாமல் மரண தண்டனை என்ற பெயரால் பல அப்பாவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
பாரபட்சம், பாகுபாடு என்ற அடிப்படையிலே நீதி நெறிமுறை தவறிச்செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இஸ்லாம் கற்றுத் தந்த நீதி என்பது துல்லியமான நீதியாகும் இப்படிப்பட்ட தூய நீதி நெறிமுறை அமைப்போடு, இப்போது இங்கே நிலவிக் கொண்டிருக்கும் அரைகுறை நீதியை, பாரபட்சம் மிகுந்த நீதி நெறிமுறை அமைப்பை ஒப்பிட்டு மரண தண்டனையை நியாயப்படுத்துவது அறிவுக்குப் பொருத்தமானதல்ல.
இங்கு அநியாயமாக மரண தண்டனை என்ற பெயரால் பல உயிர்கள் பறிக்கப்படுகின்றன. அதற்கெதிராக போராடுவது நீதி நிலை பெற போராடுவது ஒரு முஸ்லிமின் கடமையாகும்.
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | A. முஹம்மது யூசுப் |