வெளிச்சக் கீற்றுகள் | Velicha Keetrugal
₹125.00
1 in stock
Description
பதிப்புரை விரைந்து செல்லும் நவீன யுகத்தில் இஸ்லாத்தையும் அதன் வழிமுறைகளும் கடைப்பிடிப்பது என்பது மிகச் சிரமமான செயலாக இருக்கிறது. வணக்க வழிபாடுகள் சிலவற்றை மட்டும் செய்தால் போதுமென்ற எண்ணத்தில் இன்றைய இஸ்லாமிய சமூகம் உள்ளது. இந்த நிலை சரியா தவறா என்பது கூட அறியாத சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இஸ்லாத்தை சரியாக புரிந்து செயல்பட வழிவகைகளை செய்து கொடுத்தாலும் அவற்றை உதாசீனப்படுத்தும் சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் இது ஒரு கவலையளிக்கும் இக்கட்டான நிலை. இந்நிலையை சீர்திருத்துவதில் இஸ்லாமிய அமைப்புகளும் சான்றோர்களும் முயற்சி செய்து கொண்டிருந்தாலும் இந்த முயற்சி ஒரு சிரமமான பாதையாக இருந்துகொண்டிருக்கிறது இஸ்லாம் உலகில் சத்திய மார்க்கம் திகழ வேண்டும் என் நான் முதலில் நாம் இஸ்லாத்தை கடைப்பிடிப்பவர்களாக மாற வேண்டும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த நூல். ஆசிரியர் நம்முடைய அன்றாட வாழ்வில் சந்திக்கும் நடைமுறை வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை இந்த நூலில் 29 தலைப்புகளில் இரத்தினச் சுருக்கமாக எழுதியுள்ளார் முஸ்லிம்கள் இன்று எந்தெந்த விஷயங்களில் அலட்சியமாகவும் கவலையுமின்றி இருக்கின்றார்களோ அவற்றை நினைவுகூரவேண்டும் என்று ஆசிரியர் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
Additional information
Weight | 185 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | தஸ்னீம் |