முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம்-1) | Muhammad ( Sal ) Avargalin Nannadathaigal – 1
₹250.00
Out of stock
Email when stock available
Description
அல்லாஹ்வின் மீது அண்ணலார் (ஸல்) அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை மலையை விட உறுதி வாய்ந்ததாக விளங்கியது. பல இக்கட்டான நேரங்களிலும், மிக ஆபத்தான சூழ்நிலைகளிலும் தாங்கள் முன்வைத்த சத்தியம் நிச்சயம் வெல்லும் என்று முழுநம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டினார்கள். வெற்றி பெற்ற வேளைகளில் பணிவைக் காட்டியவர்களாகவும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவர்களாகவும் விளங்கினார்கள் இப்படி நற்பண்புகளும் நன்னடத்தைகளும் நிறைந்த பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகளைப் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் அறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகத்தன்மைகளைக் கொண்ட டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய ‘Muhammad His character and Conduct’ என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை வெளியிட்டுள்ளோம். இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை இந்த நூலை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது. 20 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூலின் முதல் 10 அத்தியாயங்கள் முதல் பாகமாக வெளியிடுகிறோம். இதனைத் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ், இரண்டாவது பாகம் விரைவில் வெளிவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் வெற்றி பெற வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்துத் தந்த மருத்துவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கும் இஸ்லாமிய நிறுவனத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | ஆதில் ஸலாஹி |