முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் | Muslim Mannaratchiyil Indhiyavin Munnetram
₹100.00
Out of stock
Email when stock available
Description
இந்தியாவில் முஸ்லிம் மன்னராட்சி சர்ச்சைக்குரிய ஒன்றாகக் நீடிக்கின்றது. பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் வெள் ளையர்கள் வரலாற்றை மறைத்தும், திரித்தும் எழுதினர். முஸ் லிம்கள் வாள்முனையில் இஸ்லாத்தைப் பரப்பினார். கோயில்களை இடித்தனர் என்பன போன்ற கட்டுக்கதைகளைப் பரப்பினர் நாட்டு விடுதலைக்குப் பின் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற வேலையை வகுப்புவாதிகள் தொடர்கின்றனர். இந்தியாவில் சாதி, சதி உடன்கட்டை, வரதட்சணைக் கொடுமைகள் முஸ்லிம்களின் ஆட்சிக்குப் பின்னரே ஏற்பட்டன என்பது போன்ற புதிய பொய் களையும் இணைத்துள்ளனர் துவேஷப் பிரச்சாரத்தின் உச்சகட்டமாகப் பாடப் புத்தகங்களிலும் தம் கைவரிசையைக் காட்டினர். இதற்கிடையில் உண்மை வர லாற்றை வெளிக்கொணரும் முயற்சிகள் துவக்கப்பட்டன. வெள்ளை யரும் வகுப்புவாதிகளும் செய்த பிரச்சாரத்தை முறியடிக்க நடுநிலை வரலாற்றாசிரியர்கள் செய்த முயற்சிகள் இப்போது பயனளிக்கத் துவங்கியுள்ளன வழக்கறிஞர் கரைகண்டம் நெடுஞ்செழியன் எழுதியுள்ள இந்நூலும் வரலாற்றுத் திரிபுகளைச் சரி செய்யும் வகையில் அமைந் துள்ளது. நூலாசிரியர் உள்ளதை உள்ளபடியே எழுதியுள்ளார் ஒருபுறம் முஸ்லிம் மன்னர்கள் மதவெறியர்கள் என்ற மாயை இந்நூல் மூலம் தகர்க்கப்படுகின்றது. இன்னொருபுறம் முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியா எவ்வகைகளில் பயன் அடைந்தது என்று உணர்த்தப்படுகின்றது ஓரிறைக் கோட்பாடு, மனிதகுல சமத்துவம், சகோதரத்துவம். நாட்டு நிர்வாகம், வரி வசூல் இராணுவம், கலை, இலக்கியம். பன் மொழி வளர்ச்சி, இசை, கட்டடக்கலை ஆகிய துறைகளில் முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | கி. செடுஞ்செழியன் |