பிறை பார்த்தல் ஒர் ஆய்வு | Pirai Paarthal – Oor Aaivu
₹15.00
3 in stock
Description
இஸ்லாமிய நாள்காட்டி என அழைக்கப்படும் சந்திர நாட்காட்டி (L க Calendar) முஸ்லிம்களால் எத்துணைக் கவனத்துடனும் ஒழுங்கு முறையுடனும் பேணிப் பின்பற்றப்படுகின்றது என்பதை நினைக்கும் போது மிகுந்த கவலையும் ஆதங்கமுமே மேலிடுகின்றன. இஸ்லாமிய நாள்காட்டி என அழைக்கப்படும் சந்திர நாட்காட்டி முஸ்லிம்களால் கேலிக் கூத்தாக்கப்படுகிறது என்று கூறினால் அது மிகையல்ல.சந்திர ஆண்டின் (Lunar Year) 12 மாதங்கள் ரமழானும் ஷவ்வால் இரு வேறு மாதங்கள். ரமழான் மாதம் முதல் நாள் தொடங்கி அம்மாதம் முழுவதும் 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் முஸ்லிம்கள் பகலில் நோன்பு நோற்க வேண்டும் என்பது இறைவனால் கடமையாக்க பட்டுள்ளது ரமழான் 29ஆம் நாள் அல்லது 30ஆம் நாள் ஷவ்வால் பிறை தென்பட்ட தும் நோன்பை முடித்துக் கொண்டு ஷவ்வால் மாத முதல் நாள் பெருநாள் (ஈதுல் பித்ர் – நோன்புப் பெருநாள்) கொண்டாடப்பட வேண்டும் எனவே நோன்பு தொடங்க ரமழான் மாதத்தொடக்கம் நிர்ணயிக்கப் பட வேண்டும். பெருநாள் கொண்டாட ஷவ்வால் மாத முதல் நாள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.இன்றைய நடைமுறைப்படி இவ்விரு நாட்களும் பிறையைக் கண் ணால் நேரடியாகப் பார்த்துத்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுவது உலகில் பல நாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் ஒரே நாளில் நோன்பை தொடங்குவதும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டாடுவதும் சாத்தியமில்லாமல் இருந்து வருகிறது.
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | Furqan Publications Trust |
Author Name | Er.H.அப்துஸ் ஸமத் |