நெஞ்சோடு | Nenjodu
₹35.00
1 in stock
Description
சின்னச் சின்ன நிகழ்வுகள் – சின்னச் சின்ன சந்திப்புகள் மூலம் மிகப் பெரிய தத்துவங்களையும் எளிமையாகச் சொல்ல முடியுமா. ‘முடியும் என்று மெய்ப்பிக்கிறது இந்த நூல் ஆய்வுக் கட்டுரையின் ஆழமும் ; மெய்ப்பொருள் தேடலின் வீச்சு; கதை சொல்லியின் எளிமை இந்த மூன்றும் சேர்ந்து அழைப்பியல் துறையில் இதனை ஒரு முன்னோடி நூலாகவே மலரச் செய்துள்ளது. சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு இஸ் லாத்தை எளிய முறையில் இதயத்தை ஈர்க்கும் வகையில் சொல்ல வேண்டும் என்பது எங்கள் நிறுவனத்தின் தலையாய நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் அமைந்துள்ளது இந்த நூல் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு நிகழ்வும் அனுபவம் முத்திரையுடன் திகழ்வதால், படிப்பவர் மனங்களில் சத்திய ஒளியைப் பாய்ச்சுகின்றன. அழகான, மென்மையான, இயல் பான உரையாடல்கள் நம் உள்ளத்தை விட்டு நகர மறுக்கின்றன. வாழ்வின் பல்வேறு தளங்களைச் சேர்ந்த அன்பர்களின் ஐயங்களுக்கு இஸ்லாத்தைக் குறித்த அவர்களின் தவறான புரிதல்களுக்கு நூலாசிரியர் தந்துள்ள விளக்கங்கள் மீண்டும் மீண்டும் படித்து இன்புறத்தக்கன. அடடே, இப்படியும் கூட ஒரு விளக்கம் உண்டா’ என நமக்கு வியப்பை ஊட்டுகின்றன.
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | சிராஜுல் ஹஸன் |