நெஞ்சையள்ளும் சீறா பாகம் – 2 | Nenjaiyallum Seera – 2
₹240.00
9 in stock
Description
முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பனார் இவர் தான் படித்த நாமக்கல் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரால் பணியைத் துவக்கி மாவட்டக் கல்வி அலுவன் 2ஆம் உலகத் தமிழ் மாநாட்டு உதவித் தனி அலுவலர் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இயக்குனர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிவாளர் பதிப்புத் துறை இயக்குனர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் ஆகிய உயர் பதவிகளை வகித்தவர் 40 ஆண்டுகட்கு முன் சொல்லின் செல்வர் ராயி சேதுப்பிள்ளை அவர்களால் சிலம்பொலி என்று அழைக்கப்பட்டார். சிலம்பொலியார் நாடறிந்த நாவலர் முதல்தர இலக்கியச் சொற்பொழிவாளர், தமது இலக்கியச் சொற்பொழிவுகள் மூலம் தமிழ் இலக்கியத்தைப் பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர். இவர் பல ஆய்வு திறனாய்வு தெளிவுரை நூல்களைப் படைத்துள்ளார். பேரறிஞர் அண்ணா மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய மூன்று முதல்வர்களின் பாராட்டையும் பெற்றவர். சிலம்பொலியார் பல நாடுகளுக்குச் சென்று தமிழ் விருந்து அளித்தவர். விருதுகள் பெற்றவர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: சீதக்காதி அறக்கட்டளை விருது கலைரும் விருது தமிழக அரசின் கலைமாமணி விருது பாவேந்தர் விருது ராஜா ஸர் முத்தையா செட்டியார் நினைவு விருது சென்னை கம்பன் கழகத் தமிழ்ச் சான்றோர் விருது’ ஆகியவை.
Additional information
Weight | 315 g |
---|---|
Publisher | நேஷனல் பப்லிஷேர்ஸ் |
Author Name | சு.செல்லப்பனார் |