நல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழி
₹70.00
4 in stock
Description
நல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழி’ என்னும் இந்நூல் உள்ளே உள்ள பொருளுக்குப் பொருத்தமாக இருப்பதோடு, பெயரை உச்சரிக்கும் போதே கருப் பொருளைக் கண்களுக்கு எதிரில் காட்டுவது போல் அமைந்திருக்கிறது நல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழிதான் நனி சிறந்தது என்பதை வலியுறுத்த, நூலாசிரியர் தன் வாழ்வில் கண்ட பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி இஸ்லாமிய வழி முறைகளை இணைத்து எழுதியிருப்பது கருத்துச் செறிந்த கதைகளைப் படிப்பது போல் உள்ளது வல்லவனாகிய இறைவன் காட்டிய வழிமுறையில் வாழ்ந்தால்தான் சொர்க்கம், அதுவும் பூவுலகிலேயே கிடைக்கும் சொர்க்கம் என்பதை ஆசிரியர் திருக்குர் ஆன் நபிமொழி வாயிலாக சிறப்பாகவே கூறியுள்ளார். உண்மை நிகழ்வுகள் தெளிவோடும் எளிமையோடும் சொல்லப்பட்டுள்ள இந்நூலை ஆசிரியரின் பாமு பதிப்பகமே முதல் பதிப்பாக வெளியிட்டது. நூலின் சிறப்பைக் கருதி இஸ்லாமிய நிறுவனம் அறக் கட்டளை மறுபதிப்பாக வெளியிட விரும்பி ஆசிரியர் கேட்டுக் கொண்டது நூலின் ஆசிரியரான மதிப்புக்குரிய சகோதரி ஃபாத்திமுத்து சித்தீக் அவர்கள் மனமுவந்து நூலை வெளியீடு கொண்டு வரச் சம்மதித்தார். அவருக்கு எம் நன்றி உரித்தாகுக.
Additional information
Weight | 185 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | பாத்தி முத்து சித்தீக் |