நபி (ஸல்) வரலாறு நம் பிள்ளைகளுக்கு | Nabi (Sal) Varalaru Nam Pillaigalukku
₹150.00
8 in stock
Description
முதலில் ஒரு வேதனையான உண்மையை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், முதுகலைப் படிப்புகள் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் பலரும் அவரவர் துறை சார்ந்த படிப்புகளில் நல்ல திறமையும் ஆற்றலும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய கல்வியிலும் இஸ்லாமிய வரலாற்றில் அவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எங்கு பிறந்தார், அவருடைய பெற்றோர்கள் யார், நபிகளார் மக்களுக்கு எதை போதித்தார்கள் எனும் அடிப்படை விவரங்கள்கூட அறியாமல் இருக்கின்றனர் இந்த வாய்ப்புக்கேடான நிலைமைக்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்லர். சிறு வயதில் அவர்களுக்கு வீடுகளிலோ பள்ளிக் கூடங்களிலோ நபி வரலாறு, இஸ்லாமிய வரலாறு ஆகியவை கற்பிக்கப்படவில்லை. கற்பிக்கப்பட்டிருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காது பள்ளி மாணவர்களுக்குப் புரியும் வகையில் நபி வரலாற்றைக் கற்பிக்க நாங்கள் தயார்தான்; ஆனால் அதற்கேற்ற தகுதியான நூல்கள் இல்லையே” என்பது பள்ளி நிர்வாகிகளின் குறையாக இருந்தது.
Additional information
Weight | 260 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அதிரை அஹ்மத் |