நபிமொழி நாற்பது | Nabimozhi Narpadhu
₹25.00
3 in stock
Description
ஷா வலியுல்லாஹ் (1703-1764) அவர்களின் இயற்பெயர் ஷா குத்புதீன் அஹ்மத். நம்முடைய 61 ஆண்டுகால வாழ்வில் அந்தக் காலத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மகத்தான பணியாற்றி இருக்கிறார். பார்சி மொழியில் முதன் முதலாக குர்ஆனை மொழிபெயர்த்தவர் 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய தேவ்பந்த், ஃபரங்கி மஹால், அலிகர், நத்வதுல் உலமா ஆகிய கல்வி இயக்கங்கள் அனைத்துமே ஷா வலியுல்லாஹ் அவர்களின் சிந்தனைகளால் எழுச்சி பெற்றவையே. தப்ஸீர் (குர்ஆன் விரிவுரை), ஹதீஸ் (நொழிகள்), ஃபிக்ஹு (மார்க்கச் சட்டம்), உஸுலே ஃபிக்ஹு (மார்க்க சட்ட அடிப்படைகள்) போன்ற அடிப்படையான இஸ்லாமிய அறிவுக்களங்களில் பிற்காலத்தில் வல்லமை பெற்ற வல்லுநர்கள் எல்லாருமே நேரடியாகவோ மறைமுகமாகவோ அவரிடமிருந்து பயன்பெற்றவர்கள் அத்தகைய தனிச்சிறப்புமிக்க, தன்னிகரற்ற மார்க்க மேதையால் தொகுக்கப்பட்ட நாற்பது நபிமொழிகள் தாம் நீங்கள் ஏந்தியிருக்கும் நபிமொழி நாற்பது’ என்கிற இந்த நூல்.! வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் வழிகாட்டுகின்ற ஒளிவிளக்குகளாக இந்த அமுத மொழிகள் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் |