நபிமார்கள் வரலாறு பாகம்-7 | Nabimargal Varalaru 7
₹350.00
2 in stock
Description
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தாத்துர்ரிகாஉ போர் முடித்து திரும்பிக் கொண்டு) இருந்தபோது நபித் தோழர்களில் ஒருவர் பறவைக் குஞ்சு ஒன்றுடன் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குஞ்சினைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அக்குஞ்சிடம் அதன் இரு தாய் பறவையோ அவற்றில் ஒன்றோ பறவைக் குஞ்சைப் பிடித்திருந்தவர் முன்னால் வந்து, அதன்மீது தானே விழுந்து விடுவித்தது. அப்போது மக்கள் இதனைப் பார்த்து வியப்புற்றதைக் கண்டேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் பிடித்த பறவைக் குஞ்சினுடைய (தாய்ப் பறவையாம்) இந்தப்பறவை, தன் குஞ்சின் மீது வைத்திருக்கும் கருணையால், அதன்மீது தானே விழுந்து விடுவித்த)தைக் கண்டு நீங்கள் வியப்புறுகிறீர்களா? அல்லாஹ் மீதாணையாக! உங்களுடைய இறைவன், பறவைக் குஞ்சின் மீது கொண்டுள்ள இந்த (தாய்ப்) பறவையின் கருணையைவிட உங்கள் மீது மிகவும் கருணையாளன் ஆவான் என்று கூறினார்கள்.
Additional information
Weight | 845 g |
---|---|
Publisher | ஆயிஷா பதிப்பகம் |
Author Name | இப்னு கஸீரி |