தொழுகை IFT | Thozhugai
₹14.00
3 in stock
Description
அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் அவனது கட்டளைகளை ளுக்கு மாற்றமாக வாழும் ஒருவரின் போக்குக்கும், அல்லாஹ் வுக்கு அடிபணிந்து, அவனது கட்டளைகளுக்கு உட்பட்டு வாழும் மற்றொருவரின் போக்குக்கும் இடையில் வானத்திற் கும், பூமிக்கும் உள்ள வேறுபாடு உண்டு. இருவரின் வாழ்வும் ஒன்றுபோல் இருக்காது: இருக்கவும் முடியாது. இத்தகைய வேறுபாட்டைத்தான் நாம் தொழுபவருக்கும் தொழாதவருக்கும் இடையிலும் காண்கின்றோம். தொழுபவர் தான் அறிந்துகொண்டே இறைவனுக்கு ஒருபோதும் மாறு செய்ய மாட்டார். நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், வஞ்சகம் பொய், கொடுமை, குழப்பம் விளைவித்தல், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்பவருக்குக் கீழ்ப்படிதல் போன்ற இழிவான செயல்களை தொழுபவர் ஒருபோதும் புரியமாட் டார். தொழுகையாளியின் வாழ்வில் இத்தகைய குறைகள் காணப்பட்டால் அவர் பெயரளவுக்கே, வெறும் சடங்காகவே தொழுகையை நிறைவேற்றுபவராக இருப்பாரே தவிர, வாய் மையுடன் தொழுகையை நிறைவேற்றுபவராக இருக்கமாட்டார் என்பது நிச்சயம்.
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அபூசலீம் அப்துல்ஹை |