தீமைகள் புயலாய் வீசும்போது..! | Theemaigal Puyalai Veesumpodhu!
₹35.00
2 in stock
Description
சமுதாயத்தில் தீமைகள் மலிந்து காணப்படும், அவை புயல் வீசினால் நாம் என்ன செய்ய வேண்டும்? இது குறித்து மனிதர்கள் பலவகையாகச் சிந்திக்கின்றனர் ஒரு சாரார், ‘காலத்தின் போக்கில் நாமும் நடை போட வேண்டும். இல்லையேல் நாம் வாழ முடியாது’ என்று எண்ணுகின்றனர் மற்றொரு சாரார், ‘காலம் எவ்வாறு இருந்தாலும் சரி நாம் மட்டும் நேர்மையைக் கைவிடக் கூடாது! நம் தனிப் பட்ட வாழ்வைச் சீராக அமைத்துக் கொள்ள வேண்டும் மேலும் நாம் சமூக கூட்டு வாழ்வை மாற்றியமைக்க வலிமை யற்றோராக இருக்கிறோம். எனவே, சமூகச் சீர்திருத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை தனிப்பட்ட வாழ்வில் நாம் நேர் மையாக வாழ்ந்தால் போதுமானது!’ என்று கருதுகின்றனர் பிரிதொரு சாரார், ‘நாம் நேர்மையாக வாழ்ந்தால் மட்டும் போதாது; சத்தியத்தை – நேர்மையை விரும்பும் நம் போன்ற மக்களை ஒன்று திரட்டி, தீமைக்கு எதிராகப் போராட வேண்டும். வல்ல இறைவன் நமக்கு அளித்துள்ள ஆற்றல்கள் அனைத்தையும், அதற்காக செலவிட வேண்டும் இவ்வாறு செயல்பட்டால்தான் என்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் நேரான வழியில் நிலைத்து நிற்க முடியும் இல்லையேல், தீமைப் புயல் நமது தனிப்பட்ட வாழ்விலும் புகுந்து, அதனையும் அழித்து விடும். எனவே நாம் தனிப் பட்ட வாழ்வில் தூய்மையாக இருப்பது மட்டுமல்லாமல் சமூக வாழ்வையும் சீர்திருத்தம் செய்து தூய்மைப் படுத்த வேண்டும் என்று சிந்திக்கிறார்கள்.
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா முஹம்மத் யூசுஃப் இஸ்லாஹி |