திருக்குர்ஆனின் பாதையில்… வாழ்வியல் பயணம்! | Thirukuranin Paadhaiyil… Vaazhviyal Payanam
₹120.00
5 in stock
Description
திருக்குர்ஆன் ஓர் வாழ்வியல் பொக்கிஷம். மனிதகுலம் முழுவதற்குமான சொத்து. அள்ளக் குறையாத அறிவுக் கருவூலம் இந்நூல் திருக்குர்ஆன் குறித்த நூல்களில் தனித்துவம் வாய்ந்தது திருக்குர்ஆன் நபித்தோழர்களிடம் வானளவு மாற்றங்களை நிகழ்த்திக்காட்டியது. காரணம் அவர்கள் திருக்குர்ஆனை அணுகிய விதமும் முறையும்தான். அவர்கள் திருக்குர் ஆனை புத்தகமாகப் பார்க்கவில்லை. இறைவனின் குரலாகக் கேட்டார்கள் இறைக்கட்டளையாக உணர்ந்தார்கள். நபித்தோழர்கள் அணுகிய அதே விதத்தில் ன்று நாம் அணுகினாலும் அதே மாற்றத்தை நம்முள் விதைக்க திருக்குர்ஆன் தயாராக இருக்கிறது. நாம் தயாராக இருக்கின்றோமா என்பதுதான் கேள்வி இந்த நூல் அதற்கான வழிகாட்டுதல்களையும் திட்டங்களையும் நுட்பமாகச் சொல்கிறது அறிஞர் குர்ரம் முராத் குர்ஆன் மனிதர். குர்ஆனை இவர் வெறுமனே வாசிக்காமல் சுவாசித்திருக்கின்றார். அவரின் உயிர் மூச்சே இந்தக்குர்ஆன்தான் இந்த நூலை ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் அதனைப் பின்பற்றி திருக்குர்ஆனை ஓதவேண்டும். இதனை வாசிப்பதற்கு முன் நாம் குர்ஆனை ஓதுவதற்கு, வாசித்தபிறகு திருக்குர்ஆனை ஓதுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசத்தைக் கண்டிப்பாக உணர முடியும்.
Additional information
Weight | 215 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | குர்ரம் முராத் |