சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டம் | Sirupanmai Muslimgalukkana Islamiya Sattam
₹120.00
1 in stock
Description
நாம் சிறுபான்மையாக வாழ்பவர்கள். எமது பிரச்சினைகளும் அது உருவாக்கும் சமூக, பொருளாதார, கலாச்சார. அரசியல் சூழமைவுகளும் வித்தியாசமானவை. எனவே எமக்கான தீர்வுகள் குறித்து ஓரளவு வித்தியாசமா பார்வை நமக்குத் தேவை. அந்தப் பார்வை அறபு-முஸ்லிம் நாடுகளிலிருந்து தருவிக்க முடியாதது. இன்று இஸ்லாமிய சட்டம் பரப்பில் ஃபிக்ஹுல் அகல்லிய்யாத், பிக்ஹுல் முவாதனா, பிக்ஹுத் ததய்யுன் எனும் பல்வேறு பெயர்களில் ஆய்வுப் பரிமாணம் பெற்று வருகின்றது.
இப்பின்னணியில் பன்மைச் சமூகமொன்றில் முஸ்லிம் சிறுபான்மை அடையாளத்தைக் காக்கும் நிலையில், சக சமூகங்களுடன் இணைந்தும் இணங்கியும் வாழ்வதற்கான வழிமுறைகள் எவை என்பதையும் சூழமைவில் தாம் வகுத்துக் கொள்ள வேண்டிய வாழ்வொழுங்கில் முதன்மைக்குரியவை எவை என்பதையும் இந்நூல் பேச விளைகின்றது தமிழ்ச் சூழலில் இத்தொனிப்பொருளில் வெளிவரும் முதல் நூல் இது என்பது கவனிப்புக்குரியது
Additional information
Publisher | NULL |
---|---|
Author Name | அஷ்ஷெய்க் ரவூஃப் ஸெய்ன் |