கோட்சேயின் குழந்தைகள் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதம்
₹180.00
4 in stock
Description
இந்துத்துவ தீவிரவாதம் உருப்பெற்றுள்ளது. ஏப்ரல் 6,2006 அன்று நந்தித் நகரில் நீண்டகால ஆர். எஸ். எஸ். உறுப்பினரான லஷ்மண் ராஜ்கொண்டவார் வீட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் அவரின் மகனும் சங்பரிவார் சேர்ந்த மற்றொரு உறுப்பினரும் கொல்லப்பட்டனர் ஆர், எஸ். எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களின் நீண்ட கால திட்டமான இந்து ராஷ்டிரத்தை உருவாக்க, எவ்வாறு முறையாக வெடிபொருட்களை தயார் செய்து அதனை சேமித்து வைக்கின்றனர், ஆயுத பயிற்சிகளை வழங்குகின்றனர், சிறுபான்மையினர் மீது வெடிகுண்டுகளை வீச பயிற்சி கொடுக்கின்றனர் என்பதை இந்த குண்டுவெடிப்பு வெளியே கொண்டு வந்தது. மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு வழக்கு களில் இந்துத்துவவாதிகளுக்கு உள்ள பங்கினை ஐந்து வருடங்கள் கழித்து விசாரணைகள் உறுதிப்படுத்துகின்றன.
பொருளாதாரத்தை திரட்டுதல்,வளங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் வெளிநாட்டு சக்திகளுடன் இந்துத்துவ அமைப்புகளுக்கு உள்ள தொடர்புகள் இந்த திட்டத்தின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
Additional information
Weight | 335 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | B.ரியாஸ் அஹமது |