காலடிச் சுவடுகள் | Kaaladi Suvadugal
₹65.00
1 in stock
Description
இந்த நூல் வித்தியாசமான நூல்… வரலாறு படைத்த மனிதர்களின் வரலாற்றிலிருந்து பளிச்ச மின்னுகின்ற காட்சிகளை விவரிக்கின்ற நூல் இது சின்னச் சின்ன நிகழ்வுகள் தான் ஆனால் எல்லாமே வாழ்க்கைக்கு ஒளியூட்டுகின்ற உதய தாரகைகளாக, நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றன. அன்பு, பண்பு, துணிவு, கனிவு, பணிவு, வாய்மை, நேர்மை தூய்மை, வாக்குத் தவறாமை, எளிமை, என அனைத்து நற்குணம்களின் நறுமணத்தை பக்கங்கள் தோறும் நுகர முடியும் மறுமை சிந்தனை. இறைவனை மையமாகக் கொண்ட வாழ்க்கை, விருந்தோம்பல், தன்னலத்தை விட பிறர் நலத்தை முன்னுரிமை தருகின்ற அந்த உள்ளம், சுயமரியாதை, நிதானம் சகிப்புத்தன்மை, அமானிதங்களைப் பேணுவதில் விழிப்புடன் இருத்தல், மன்னிக்கும் மனப்பான்மை என வாழ்க்கைக்கு அணி சேர்க்கும் உயிர் குணங்களின் ஒளிவீச்சுகளை ஒவ்வொரு சம்பவங்களிலும் பார்க்க முடியும். உளத்தூய்மை , மதிநுட்பம், நன்றியுணர்வு, வீரம், தியாகம் மறுமைச்சிந்தனை, உறவுகளைப் பேணி நடக்கின்ற பண்பு என ஆளுமையை அழகூட்டும் மாண்புகளின் சுவையை ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அனுபவித்துணர முடியும். 1999-2001 ஆண்டுகளில் தினமணி நாளிதழின் இணைப்பான வெள்ளி மணியில் வெளிவந்த கட்டுரைகள் தான் இவை மணிச்சுடர், குர்ஆனின் குரல், அஷ்ஷரிமத்துல் இஸ்லாமியா, மாலை மலர், மலேசியாவில் இருந்து வெளிவரும் நம்பிக்கை போன்ற இதழ்கள் இவற்றில் சிலவற்றை மறுபிரசுரம் செய்தன. சமரசம் இதழில் தொடர்ந்து வெளியாயின வாசியுங்கள். மற்றவர்களுக்கும் வாசிக்கக் கூறுங்கள் எண்ணங்கள் ஈடேற இறையருளை இறைஞ்சுகிறோம்.
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அஜுஸ் லுத்ஃபுல்லாஹ் |