காதியானிகள் யார்? | Kaadhiyanigal Yaar?
₹35.00
3 in stock
Description
முஸ்லிம் சமுதாயத்தில் தோன்றிய இந்தக் குழப்பத்தை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் நெஞ்சுரத்துடன் எதிர் கொண்டு, காதியானிசத்தின் பொய் வாதங்களைத் தவிடு பொடியாக்கினர். குறிப்பாக, மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் இந்தப் பொய்யர்களுக்குத் தக்க பதிலடி தந்து இறுதி நபித்துவத்தை நிலைநாட்டினார். மௌலானாவை போன்ற அறிஞர் பெருமக்களின் கடும் உழைப்பின் காரணமாக காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்றும், முஸ்லிமல்லாத சிறுபான்மையினர் என்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் இந்தத் தீக்குறும்பர் களின் திருகுதாளச் செயல்பாடுகள் இலேசாகத் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. போதிய மார்க்க அறிவு இல்லாத அப் பாவி இளைஞர்கள் இந்தக் கும்பலின் மாய வலையில் சிக்கி வழிதவறிச் செல்லும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன ஆகவே, காதியானிகள் யார், அவர்களின் கொள்கைகள் என்ன, மிர்சா குலாம் அஹ்மத் மக்களிடம் செய்த பிரச்சாரம் என்ன, அவருடைய தீய நோக்கத்தின் பின்னணி என்ன, அவர் எந்த அளவுக்கு வழிகெட்டுப் போனவர் என்பதைத் தமிழ் கூறும் மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும் என்று கருதினோம்.
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | P.P. அப்துல் ரஹ்மான் |