கலீஃபாக்கள் வரலாறு (சாஜிதா) | Kalifakkal Varalaru
₹300.00
2 in stock
Description
என் தோழர்களை ஏசாதீர்கள் என் தோழர்களை ஏசாதீர்கள் என் உயிர் எவன் கையிலுள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் உஹத் மலையளவுக்கும் தங்கத்தை தானமாகச்செலவிட்டாலும் என் தோழர்கள் இறைவழியில் செலவிட்ட இரு கையளவு அல்லது அதில் பாதியளவைக்கூட எட்ட முடியாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். இன்றைக்கு ஒருவர் மலையளவுக்கு தங்கத்தை வாரி வழங்கினாலும் நபித்தோழர்கள் இறைவழியில் செலவிட்ட சிறிதளவு கொடைக்கு அது இணையாகாது. ஏனெனில் இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் மிகவும் நெருக்கடியான நேரத்தில் நபித்தோழர்கள் தம்மிடமுள்ள பொருளை வழங்கினார்கள். அது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் காக்கவும், மார்க்கம் பரவவும் உதவியது. மற்றவர்களின் உதவிகள் அவ்வாறல்ல. அத்துடன நபித்தோழர்களிடம் இருந்த சகோதரத்துவம், அன்பு பரிவு பணிவு பிறருக்கு முன்னுரிமை அளிக்கும் குணம் போராட்டம் எல்லாவற்றுக்கும் மேலாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடனான தோழமை ஆகிய அனைத்தும் சேர்ந்து அவர்களின் மதிப்பை உயர்த்திவிட்டன.
Additional information
Weight | 670 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மஹ்மூத் அஹமத் கழன்ஃபர் |