கணவன் மனைவி-விரிந்து பரவும் உறவு | Kanavan Manaivi virindhu Paravum uravu
₹80.00
1 in stock
Description
கணவன் மனைவி இருவருக்குமான உறவுகள், பரிமாறவேண்டிய உரிமைகள், ஆற்றவேண்டிய கடமைகள் இறைவழியிலும் மனோதத்துவ ரீதியில் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது பெற்றோர், மனைவி, பிள்ளைகள், உடன்பிறந்தோர், நண்பர்கள் என விரிந்து பரந்திருக்கும் உறவுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை, கணவன் மனைவி என்ற ஒப்பந்த வளையத்திற்குள் நுழைந்ததும் மனம் மாறி உறவுகளைத் துண்டித்து வாழும் தம்பதிகளும் உள்ளனர் இவர்கள் ஏன் மனம் மாறுகிறார்கள்? மாறவேண்டிய மனநிலை எது என்பதை இந்நூல் விளக்குகிறது. கடமைகளைச் செய்வதில் உரிமைகளைப் பரிமாறுவதிலும் விரிசல் வராமல் வாழ இந்நூல் வழிகாட்டும் ஓர் ஆண், தன் தாயிக்கும் தாரத்திற்குமிடையில் தராசாய் இருக்க வேண்டும்; உறவுகளுக்கிடையில் ஒரு தலைப்பட்சம் கூடாது குடும்ப நிர்வாகத்தில் சரியாக இருப்பவரே சமூகம், தேசம் சர்வதேசம் என எல்லா நிர்வாகத்தையும் எதிர்கொள்வார். எனவே தம்பதியர் உறவுகளோடு ஒன்றி, குடும்பத்திலும், சமூகத்திலும் சிறந்தோங்கி, இறைவனுக்குப் பொருத்தமாக வாழ்ந்து ஈருலகிலும் வெற்றிபெற வேண்டுமென்ற தலையாய நோக்கத்தை இந்நூல் நிறைவு செய்யும்.
Additional information
Weight | 170 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | Dr.M.M அப்துல் காதிர் உமரீ |