ஐகாத் கூட்டு விநியோகம் | Zakat Kootu Viniyogam
₹15.00
8 in stock
Description
இந்த நூல் மாறுபடும் நூல் சிந்திக்கவும் செயல்படவும் செய்து முடிக்கவும் தூண்டுகின்ற கனமான நூல் ஜகாத் தொடர்பாக காலங்காலமாக மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டிருக்கின்ற எண்ணங்களையும் பிம்பத்தையும் மனச்சித்திரத்தையும் தவிடுபொடியாக உடைத்தெறிகின்ற புரட்சிகரமான நூல் இது ஏழை, எளிய மக்களுக்கு சில்லறைகளாக ஆண்டு தோறும் கொடுப்பதற்காகவா ஜகாத் கடமையாக்கப் பட்டது? இல்லை இல்லை. சமுதாயத்திலிருந்து வறுமை யையும் ஏழ்மையையும் முற்றாகத் துடைத்தெறிவதற்காக கடமையாக்கப்பட்ட ஏற்பாடுதான் ஜகாத் என்பதை அழுத்தமாக, ஆணித்தரமாக, மனதில் பதியும்படியாக எடுத்துரைக்கின்றார் நூலாசிரியர் இதற்குச் சான்றாக வரலாற்றுச் சுவடுகளையும் சமகால முயற்சிகளையும் இழைத்துச் சொல்லியிருப்பது நூலின் வனப்பையும் கனத்தையும் கூட்டுகின்றது ஊர்தோறும் பைத்துல்மால் நிறுவப்பட வேண்டும் என்பது தான் இந்த நூலின் அடிநாதம் வாசியுங்கள்! நண்பர்கள், உறவினர்களுக்கும் வாசிக்கக் கொடுங்கள் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | ஹெச். அப்துர் ரகீப் |