எனது பயணம்-Road To Makkah | Yenadhu Payanam
₹200.00
5 in stock
Description
சிலுவைப் போருக்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்னமே அய்ரோப்பியக் கிறித்தவர்களுக்கு இஸ்லாத்தின் மீதான வெறுப்பு முகிழ்க்கத் தொடங்கி விட்டது. சிலுவைப்போர் அந்த வெறுப்பை நிலைப்படுத்திவிட்டது. இன்று வரை அந்த வெறுப்பும் அருவெருப்பும் இஸ்லாத்தின் மீதும், ஏகத்துவத்தின் மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் மனத்தில் தலைமுறை தலைமுறையாய் வேரூன்றி வருகிறது.இந்த நிலையில்தான் பிரபல அய்ரோப்பிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான லியோ போல்டு வில் (முஹம்மது அஸதி அவர்கள் அரபியப் பாலைவன நாடுகளில் நுழைகிறார். அந்த மக்களிடம் பழகுகிறார். அரபிய இஸ்லாமிய கலாச்சாரத்தை நுகர்கிறார். அவர்கள் வாழ்முறையைக் கற்கிறார். அவர்களோடு கலந்து போகிறார். இஸ்லாத்தில் கரைந்து போகிறார். புனித கஃபாவை வலம் வருகிறார். சவுதி மன்னர் முதல் சாதாரண அரபு ஒட்டக ஓட்டி வரை இசைவுடன் அவரோடு பழகுகின்றனர்.எழுதுகோலால் கற்பித்த அல்லாஹுத்தஆலாவின் பேருதவியோடு ROAD TO MAKKAH என்கிற இந்தத் தன் வரலாற்றுக் காவியத்தை இயற்றி முடித்தார். இந்த நூல் அய்ரோப்பிய அறிவாளிகளின் மனத்தில் இஸ்லாம் பற்றிப் படர்ந்திருந்த அறியாமை இருளை முழுமையாக நீக்கியது. ஆம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அரபியர் பற்றியும் இஸ்லாமிய வாழ்நெறி பற்றியும் உலகம் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்துச் செய்திகளின் நேரடி அனுபவ அறிவிப்பாகத் திகழ்கிறது இந்நூல்.
Additional information
Weight | 500 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | S.O.அபுல் ஹசன் கலாமி |