எனது தலைவர் ஒரு இஸ்லாமியர் | Yenadhu Thalaivar oru Islamiyar
₹20.00
12 in stock
Description
X (எக்ஸ்) என்ற எழுத்தைப் பார்த்தவுடன் அடக்குமுறைக்கு எதிரான போராட்ட குணமும், போராட்டத் துணிவும் தான் நம் நினைவுக்கு வரும். இந்தப் படிமத்தை ஏற்படுத்தியவர் புரட்சியாளர் மால்கம் எக்ஸ்.
அமெரிக்க அரசியல் வரலாற்றைக் கற்பவர்கள், மால்கம் எக்ஸ் வாழ்வை அறியாமல் அந்தப் பாடத்தை நிறைவு செய்ய முடியாது உலகம் முழுவதும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் இளைஞர்களின் ஆதர்ச அடையாளமானார் மால்கம் எக்ஸ். இந்த அடையாளத்தை அழிப்பதற்காகவே X (எக்ஸ்) என்ற குறியீட்டை பாலியலின் குறியீடாக மாற்றி, இளைஞர்களின் எழுச்சியை மடைமாற்றியது மேற்குலகம்.
அசுர பலம் பொருந்திய அமெரிக்க ஆட்சியாளர்களின் அதிகாரத்தை ஆட்டிப் பார்த்த ஒருவர், அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தை சமரசமின்றி மேற்கொள்ளும் ஒருவருக்கு தலைவராக இருப்பதில் வியப்பில்லை.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | முனைவர் சுப. உதயகுமாரன் |