உமர் இப்னு அப்துல் அஜீஸ் | Umar Ibnu Abdul ajees
₹40.00
7 in stock
Description
ஒரு வாழ்க்கை முறையை அலசிப் பார்த்து, அது இறைவனால் அளிக்கப்பட்ட நெறிதான் என்று திருப்தி அடைந்து அதன் மீது ஈமான் (நம்பிக்கை) கொண்ட பின் எந்தவித சலனமோ தயக்கமோ இன்றி வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அதனைப் பின்பற்றுவதுதான் அறிவுடைமையாகும். அதுவே நமது வாழ்வின் துறைகள் அனைத்தையும் தழுவி நிற்க வேண்டும். தனிமனிதன் என்ற தோரணையில் நாம் ஒரு நெறியைத் தழுவினால், சமூகத்தில் நாமோர் அங்கம் என்ற வகையில் நமது கூட்டு வாழ்க்கையும் அந்த நெறியை – தீனை ஓட்டியதாக அமைவதுதான் பொருத்தம். இது உண்மையும் சத்தியமும் ஆகும். இந்த சத்தியம் மேலோங்கி நிலைக்க வேண்டும் என்ற உறுதி உணர்ந்த எவரும் சத்தியத்தின் குடை நிழலில் யாவற்றையும் கொண்டு வரும் வரை ஓய்ந்திட மாட்டார்; தலை சாய்ந்திட என்றுதான் பொருள். இந்த உறக்கம் மீளா உறக்கம் கொண்டோர், தங்கள் சக்திகள் அனைத்தையும் திரட்டி தீய சக்திகளை அடக்கி அழித்து சத்தியமும், தர்மமும் தழைத்தோங்கிடச் செய்ய வேண்டும்; சத்தியத்தின் உயர்வைமாட்டார். தீமையை ஒழித்து நன்மையை நிலை நாட்டுவதில் எவருக்குப் பொங்கும் உணர்ச்சி இல்லையோ, பீறிட்டெழும் உத்வேகமில்லையோ, கொதித்தெழும் ஆர்வமில்லையோ அவருடைய ஆன்மா உறக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறது. மரணமாக மாறி விடுவதற்கு முன்னர் விரைவில் வீறு கொண்டு விழித்தெழுந்து சத்தியமும், தர்மமும் மேலோங்குவதற்காக நம் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்வோமாக!
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் |
Author Name | குலாம் சர்வர் |