உன்னை அறிவாய்…உண்மை அறிவாய் | Unnai Arivai.. Unmai Arivai
₹30.00
10 in stock
Description
மனிதர்களாகிய நாம் ஏன் பிறந்தோம்? நம் வாழ்வின் நோக்கம் என்ன? நம்மைப் படைத்தவன் யார்? மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்? மனிதனின் பிறப்பு, வாழ்வு, இறப்பு இவற்றில் எந்த நோக்கமும் இல்லையா? இப்படி வாழ்க்கை குறித்த பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுவது இயல்பே உங்கள் கரங்களில் தவழும் இந்த சிறிய நூல் உங்கள் சிந்தனையைத் தூண்டி நான் ஏன் பிறந்தேன்? என்ற கேள்விக்கான பதிலையும் பெற தூண்டும்.அது மட்டுமல்லாமல், நம்மைப் படைத்த இறைவன் யார்? இறைவன் தன் வழிகாட்டலை மனிதனுக்கு அனுப்பி யுள்ளானா? ஏன் இறைவனே இவ்வுலகத்திற்கு வரவில்லை இறைவனின் பண்புகள் யாவை? இஸ்லாம் – முஸ்லிம் சொற்பொருள் என்ன, குர்ஆன் என்றால் என்ன, இறைத் தூதர்கள் என்பவர்கள் யார்? போன்ற பல்வேறு கேள்வி களுக்கு இந்த சிற்றேட்டின் வாயிலாக இரத்தினச் சுருக்கமாக எளிமையாக நூலாசிரியர்கள் விளக்குகின்றனர். பேராசிரியர் முனைவர் S.K. ஹயாத் பாஷா அவர்கள் ஆங்கில மூல நூலின் சுவை குன்றாமல் அழகு தமிழில், எளிய நடையில் மொழி பெயர்த்துள்ளார். அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்நூலை பெரியவர்கள் பெண்கள், மாணவ, மாணவியர், இளைஞர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த சகோதர, சகோதரிகளுக்கும் இஸ்லாத்தை எளிமையாக அறிமுகப்படுத்துவதற்கும் இச் சிறு நூல் துணை நிற்கும் என்று நம்புகிறோம்.
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | ஜீலானி |