உனது பெயரால் உயிர் வாழ்கிறோம் | Unadu Peyaral Uyir Vaazhgirom
₹140.00
Out of stock
Email when stock available
Description
இறைவனின் 99 திருநாமங்கள் சில பெயர்களை முன் வைத்து இந்த நூல் பேசும் அழகு தனி. நூலாசிரியர் வரலாற்றின் அடியாழங்களுக்குச் சென்று அரிய வரலாற்று நிகழ்வுகளை ஆங்காங்கே நூல் முழுவதும் சொல்லிச் செல்கின்றார். புத்தகம் புதிய வரலாற்று நிகழ்வுகளும் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன சிறந்த பேச்சாற்றல் கொண்டியங்கும் நூலாசிரியரின் சொற்சித்திரமாகவே இந்த நூல் விரிந்துகொண்டே செல்கிறது. அது தடையற்ற வாசிப்பிற்கு துணைபுரிகிறது உணராமல் செய்யும் ஓராயிரம் வழிபாடுகளைவிட உணர்ந்து செய்யும் சில நூறு வழிபாடுகள் சிறந்ததல்லவா? இறைவனின் பண்புகளை நாம் அறிந்து, புரிந்து, உணர்ந்து கொண்டால்தான் நமது வழிபாடுகள் உரம் பெறும். நமது வாழ்வு உயிர்பெறும் இறைவனைக் குறித்த அறிதலுக்கான முயற்சியாகத்தான் இந்த நூலை நாம் வெளியிடுகின்றோம் இறைவனின் பெருங்கருணையையும், பேராற்றலும் அவனது ஏனைய பண்புகளையும் உள்ளபடியே உணர்ந்து அந்தப் பண்புகளைக் கொண்டு நம் வாழ்வை அலங்கரித்து உலகை வழிநடத்திச் செல்லும் தகுதியை வளர்த்துக் கொள்வோம் இறைவா..! உயிர் கொடுத்தவன் நீயே! மரணிக்கச் செய்பவனும் நீயே! மீண்டும் எழுப்பி கேள்வி கணக்கு கேட்பவனும் நீயே தீர்ப்பளிப்பவனும் நீயே! உன்னைச் சரணடைகிறோம். உன் புகழ் பாடுகிறோம். எல்லாம் வல்ல இறைவா… உனது பெயரால்தான் நாங்கள் உயிர்வாழ்கிறோம். இறைவா.. இந்த எளிய முயற்சியை அங்கீகரித்து அருள்புரிவாயாக.
Additional information
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
---|---|
Author Name | மௌலவி நுஹ் மஹ்ழரி |