இஸ்லாம்: சந்தேகங்களும் தெளிவுகளும் | Islam: Sandhegangalum, Thezhivugalum
₹10.00
12 in stock
Description
இஸ்லாம் என்று சொன்னவுடன் இன்று பெரும்பாலானவர்களில் உள்ளங்களில் ஒருவித தவறான எண்ணம் தான் தோன்றும். படித்தவர். பாமரர் என யாரும் இந்த விஷயத்தில் விதிவிலக்கு அல்ல. ஏனெனில் மீடியாக்கள் எந்தளவிற்கு இஸ்லாத்தை பற்றிய தவறான கருத்துக் களை அனுதினமும் பதிவுசெய்து வருகின்றனர். இஸ்லாத்தைப் பற்றி தவறான எண்ணம் கொண்டிருக்கும் பலர் இஸ்லாம் குறித்த அடிப் படையை அறியாதவர்களாகவும், அல்லது எங்கோ கேட்ட செவி வழிச் செய்தியின் மூலமாகவோ அல்லது எந்த ஆதாரமும், அடிப்படையும் இல்லாமல் பரப்பப்பட்டுவரும் அதறுப் பிரச்சாரங்களுக்கு பலியான வர்களாகவும் இருந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை. இப்படி இஸ்லாம் குறித்த தங்களது தவறான எண்ணங்களை, ஐயப்பாடுகளை களைவதற்கு அவர்கள் முயற்சிப்பதும் இல்லை.ஒருவரைப் பற்றி தவ நான எண்ணம் கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து உண்மை வர வாய்ப்பில்லை என்று அவர்கள் எண்ணலாம். முஸ்லிம்களும் அவர்க ளுக்கு ஏற்பட்டிருக்கும் ஐயங்களை களைவதற்கு போதுமான முயற்சி களை செய்வதுமில்லை. இது ஒரு ஆரோக்கியமான நிலை அல்ல.
முஸ்லிம்கள் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி இது போன்ற தவறான புரிதல்களை களைவது காலத்தின் கட்டாயமாகும். அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எடுத்தியம்புவதும் முஸ்லிம்கள் மீதான கடமை என்பதையும் மறந்து விடக்கூடாது.
இப்படி இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிந்துணர்வுக்கு பதிலளித் திடும் வகையில் எளிமையான நூல் ஒன்றை வெளிக்கொணர்ந்திட வேண்டும் என்கிற சிந்தனையில் மொழிபெயர்க்கப்பட்டது தான் இந் நூல், இஸ்லாத்தைப் பற்றி முஸ்லிமல்லாத மக்கள் கொண்டிருக்கும் தவறான புரிந்துணர்வுகளை அடிப்படையாக வைத்து கேள்வி – பதில் அடிப்படையில் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | M.S. அப்துல் ஹமீது |