இஸ்லாமிய பார்வையில் தர்கா வழிபாடு | Islamiya Paarvaiyil Dharga Valipadu
₹20.00
15 in stock
Description
தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களில் பலர் தர்காவிற்கு சென்று வழிபடுவதிலோ, அவ்லியாக்களிடம் உதவி தேவை திலோ, எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறார்கள் – முஸ்லிம்கள் அல்லியாக்களே! எங்கள் கஷ்டங்களை போ குங்கள் எங்கள் நோயைக் குணப்படுத்துங்கள். எங்களுக்கு செல்வத்தைத் தந்து வறுமையை நீக்குங்கள் என் மகள் வெளிநாடு செல்லவும், என் மகளுக்கு குழந்தை பிறக்கவும் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் அவ்லியாக்களிடம் கூறி முறையிடுகின்றனர். இந்தச் செயல் எந்த அளவிற்கு முஸ்லிம்களிடம் ஊடுருவி இருக்கிறது என்றால் உட்காரும் போதும், எழும்பொழுதும் ‘யா முஹ்யித்தீனே’ என்று சொல்லும் அளவிற்கு. ‘பிச்சைக் காரர்கள்’ கூட முஸ்லிம்களிடம் பிச்சை கேட்கும் பொழுது நாகூர் ஆண்டவர் உங்களுக்கு எல்லா சுகமும் கொடுப்பார் என்று சொல்லி யாசிக்கும் அளவுக்கும் அவ்லியாக்களின் பக்தி நம் தமிழகத்தில் நிரம்பி வழிகிறது. சத்திய தீனுல் இஸ்லாம் பார்வையில் இச்செயல் சரியா? என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் உரசிப்பார்க்க வேண்டும் என்ற நன்னோக்கில் இந்நூல் வெளியிடப்படுகிறது.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | கீழை.S.சாதிக் |