இஸ்லாமிய அழைப்பும் செயல் முறையும்
₹40.00
11 in stock
Description
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த அறுபதாண்டு களுக்கும் மேலாக இந்தியாவில் செயலாற்றி வருகிறது. தனிமனித சீர்திருத்தம், சமூகக் கட்டமைப்பு, அரசமைப்பு என்கிற முப் பெரும் பரிமாணங்களில் செயலாற்றி வருகின்ற ஜமாஅத்தே இஸ்லாமி என்னதான் விரும்புகின்றது? இந்த நாட்டில் அது எத்த கைய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது? மக்களி டம் ஜமாஅத் முன் வைக்கின்ற செய்தி என்ன? எதன் பால் அது மக்களை அழைக்கின்றது?. அதனை அடைவதற்காக அது எத்த கைய வழிமுறைகளையும் செயல்முறைகளையும் மேற்கோள் கிறது? ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்காக ஜமாஅத்தே இஸ்லாமி மேற்கொள்கின்ற பயிற்சி முறைகள் என்னென்ன என எல்லாக் கேள்விகளுக்கும் இந்த நூலில் தமக்கேயுரிய பாணியில் விடையளித்திருக்கின்றார், மௌலானா அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). ஒரு ஏப்ரல் மாதத்தில் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஜமாஅத் மாநாடு ஒன்றில் மவ்லானா அவர்கள் ஆற்றிய உரைதான் இந்த நூல் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆங்கிலேயர்களும் வெளியேறிவிட்டார்கள். சுதந்திர இந்தியாவும் இரண்டு தலை முறைகளைப் பார்த்து விட்டது. என்றாலும் ஜமாஅத்தின் மௌலானா ஆற்றிய இந்த உரை இன்றும் சுவை குன்றாமல், சூடு ஆறாமல் படிப்பவர்களின் நெஞ்சங்களில் எழுச்சி ஏற்படுத்து அழைப்பு என்ன என்பது குறித்தும் செயல்முறை விளக்கியும் கின்ற திறன் கொண்டதாக ஜொலிக்கிறது மௌலானா அவர்கள் போகிற போக்கில் வரிகளுக்கிடையே முஸ்லிம் சமுதாயத்தை விமர்சித்துள்ள விதம் உங்களை மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கும்; சிந்திக்கத் தூண்டும் இயக்க ஊழியர்கள், ஊழியைகள் மட்டுமல்லாமல் கள், மாணவர்கள் என எல்லாரும் படிக்க வேண்டிய, தவறாமல் அறிஞர் ரகீப் படிக்க வேண்டிய அழகிய நூல் இது.
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா சையத் அபுல் அஃ லா மௌதுதி (ரஹ்) |