இஸ்லாத்தில் முன்னுரிமைகள் | Islathin Munnurimaigal
₹100.00
1 in stock
Description
ஒரு குடும்பத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் பொதுநல நோக்கில் நடந்துகொள்ள வேண்டும் பொது நலத்தைவிட தன்னலத்துக்கு முன்னுரிமை கொடுத்தால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகளும் பிணக்குகளும் தோன்றும் விரிசல்கள் விரிவடையும் நாட்டை ஆளும் அரசாங்கம் வளர்ச்சியின் பயனை அனைத்து மாநிலங்களுக்கும். அனைத்துக் குடிமக்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்தால், குடிமக்களில் சில பிரிவினரை மட்டும் திருப்திபடுத்தினால் நாட்டின் ஒற்றுமை சிதைந்து போகும் வறுமையும் வர்க்கபேதமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் ஓர் இயக்கம் அல்லது அமைப்பு எந்தக் குறிக்கோளை அடைவதற்காகத் தொடங்கப்படுகிறதோ, அந்தக் குறிக்கோளை எட்டுவதற்கான பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் கொள்கை குறிக்கோளைப் புறந்தள்ளிவிட்டு தனிமனித வழிபாட்டுக்கு முன்னுரிமை கொடுத்தால் இலக்கையும் அடைய முடியாது இயக்கமும் முடங்கிப் போய்விடும். இஸ்லாமியத் திருநெறி இந்த மண்ணுக்கேற்ற மார்க்கமாகும் இப்பூவுலகில் மனிதன் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கும், மறுமையில் மகத்தான வெற்றி பெறவும் முழுமை யாக வழிகாட்டுகிறது அந்த வழிகாட்டுதலில், ஒவ்வொருவரும் கட்டாயம் பேண வேண்டிய கடமைகள். இறைவனின் இறுதித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகள் (சுன்னத்). உபரியான நற்செயல்கள் என முறையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
Additional information
Weight | 170 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலவி நுஹ் மஹ்ழரி |