இஸ்லாத்தில் தனிமனித – சமூக உரிமைகள் | Islathil Thanimanidha – Samooga Urimaigal
₹55.00
16 in stock
Description
மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தாலும் அது குறித்து பேசப்படாத காலகட்டமே இல்லை எனலாம். அத்துடன் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்தும் முரண்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. தனி மனிதனுக்கு சமூகமா சமூகத்திற்காக தனி மனிதனா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டே வருகின்றன.
இந்த கேள்விகளுக்கு பதிலை தருபவர்கள் ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்து தீர்ப்பு வழங்குவதே வழக்கமாக இருந்து வருகிறது. இஸ்லாம் இதிலும் ஒரு நடுநிலையை பேணி, தனி மனிதனும் சமூகமும் எதிர் எதிர் துருவங்களில் நிற்க வேண்டியவர்கள் அல்ல, அவர்கள் இணைந்து பயணிக்க வேண்டியவர்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இது ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையிலும் நடத்தப்பட்டு நிரூபக்கப்பட்டு வருகிறது.
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | உம்மு முஸம்மில் |