இவர்கள் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்) | Ivargal Paarvaiyil Nabigal Naayagam (sal)
₹75.00
5 in stock
Description
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைக் குறித்து ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. வெளிவந்துகொண்டும் இருக் கின்றன. அந்த வரிசைத் தொடரில் இந்த நூல் மிகவும் கவனிக்கத்தக்கது. தனித்துவம் பெற்றது. நபி(ஸல்) அவர் களைக் குறித்த இதர மதங்களைச் சார்ந்த ஆளுமைகளின் பார்வைகள் வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அறிஞர்களின் காலத்திற்குப் பிறகு வெவ்வேறு சூழல்களில் பேசிய அந்தக் குறிப்புகளெல்லாம் நூலாகக் கோர்க்கப் பட்டிருக்கின்றன. பெர்னாட்ஷா போன்ற அறிஞர்களும், அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களும் இஸ்லாம் குறித்துச் சொன்னதை நாம் இன்றும் பெருமகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் நாம் வாழும் காலத்திலுள்ள இன்றைய ஆளுமைகளின் கருத்துகளைப் பதிவு செய்திருக் கின்றோமா? அடுத்த தலைமுறைக்கு ஓர் அரிய ஆவணம் சேர்த்து வைத்திருக்கின்றோமா? என்ற கேள்விக்கு விடையாக எழுந்ததுதான் இவர்கள் பார்வையில் நபிகள் நாயகம்(ஸல்) எனும் இந்நூல்.
Additional information
Weight | 120 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | வி.எஸ். முஹத்தத் அமீன் |