இறைநம்பிக்கை கொண்டோரே… | Irai nambikkai Kondorae
₹120.00
10 in stock
Description
ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி) அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவர்கள், அல்லாஹ் (குர்ஆனில்) இறைநம்பிக்கை கொண்டோரே என அழைப்பதை நீர் பார்த்தால் காது தாழ்த்திக் கேட்பீராக. ஏனெனில் அதன் பின்னர் ஒரு நன்மை குறித்த கட்டளையோ, ஒரு தீமை குறித்த எச்சரிக்கையோ இடம்பெற்றிருக்கும் என்று கூறினார்கள். (நூல்: இப்னு அபீ ஹாத்தீம்) இந்த நன்மொழிக்கேற்ப திருக்குர்ஆனில் யா அய்யுஹல்லதீன ஆமனூ ந இடம் பெற்றுள்ள எண்பத்து எட்டு இறைவசனங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அரபி மூலமும் அதன் தமிழாக்கமும், சொற்பொருளும் தனித்தனியாக எழுதப்பட்டுள்ளன. அதன் பின்னர் அதற்கான கருத்துரை, விளக்கவுரை இறங்கிய வரலாறு ஆகியவை இடம் பெற்றுள்ளன.இறை நம்பிக்கை கொண்டோரே என அழைத்து இஸ்லாமிய மக்களுக்கு ஒரு கட்டளையோ ஒரு தடையோ உயர்ந்தோன் அல்லாஹ் இடுகின்றான் இப்படி திருக்குர்ஆனில் கட்டளையும் தடையும் மாறி மாறி வருவதைப் படித்து அதன் படி நாம் செயல் படும்போது உண்மையிலேயே திருக்குர்ஆன் கட்டளைப்படி நாம் வாழ்வதாக ஓர் உணர்வு ஏற்படும்.
Additional information
Weight | 260 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி அப்துல் ஹாதி பாகவி |