இயக்கம் வெற்றி பெற
₹55.00
3 in stock
Description
மனித வாழ்வு சீராக அமைந்திட ஏசுத்துவம், தூதுத்துவம் மறுமை மக்கள் அனைவரும் ஒரே தாய்-தந்தையரின் வழித்தோன்றல்கள் எனும் தத்துவம் ஆகிய அடிப்படைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. இவற்றைக் கொண்டு தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் நிலவும் சீர்கேடுகளைக் களைந்து உன்னத வாழ்வை வார்த்தெடுக்க வேண்டும். இதற்காக, தனிப் பட்டவர்கள் இணைந்து குழுவாகச் செயல்பட வேண்டியது அவசியமாகும் அவ்வாறு செயல்பட முன்வருபவர்கள் தனிப்பட்ட வாழ்விலும் கூட்டு வாழ்விலும் எத்தகைய சிறப்புப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்; எந்தெந்தக் குறைகள் – பலவீனங்களிலிருந்து விலகி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இஸ்லாமிய அறிஞர் மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள். விளக்கமாகப் பதில் அளித்துள்ளார்கள் அந்த உரைக்கு இயக்கம் வெற்றி பெற ..” எனும் தலைப்பில் தமிழாடை போர்த்தி, தமிழ்கூறு நல்லுலகுக்கு வழங்குகின்றோம் இந்நூலிலிருந்து அனைவருமே பயனடையலாம். குறிப்பாக இஸ்லாமிய அடைப்படையில் மனித வாழ்வு செம்மையாக அமைந்திட குழு ரீதியாக செயல்படுவோருக்கு இந்நூல் இன்றி யமையாத ஒன்று! இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் பொருள் செறிந்து காணப்படுகிறது இதிலிருந்து முழு பயன்பெற கூட்டாக ஆய்வு செய்து, விவாதித்து பயில வேண்டும். இதற்கு முன் நாம் வெளியிட்ட ‘தொண்டு சிறக்க நூலையும், இந்நூலுடன் இணைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இந்நூலை அழகிய தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ள அய்யூரி அவர்களுக்கு இஸ்லாமிய நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. இந்நூலை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி பரவலாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Additional information
Weight | 125 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா ஸையித் அபுல் மௌதூதி |