இடஒதுக்கீடும்… முஸ்லிம்களும்… | Ida Odhukeedum… Muslimkalum…
₹20.00
3 in stock
Description
1951 செப்டம்பர் 27ல் அரசு ஆணை எண். 2452 மூலம் தமிழகத் தில் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 16 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதம் என மொத்தம் 41 சதவீதம் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது.
இந்த சமூக நீதி போராளிகள் அரசும் ஏனோ முஸ்லிம்களுக்கு வகுப்புரிமை ஆணை மூலம் வழங்கப்பட்டிருந்த 7 சதவீத தனி இட ஒதுக்கீட்டை மறந்து விட்டார்கள் போலும் சுதந்திரத்திற்கு முன்பு மாநிலத்தில் 16.6 சதவீத இட ஒதுக்கீடும் தேசிய அளவில் 25 சதவீத இடஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு இருந்து வந்தது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 1948ல் மாநிலத்தில் 16.6 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. தேசிய அளவிலான இட ஒதுக்கீடு முற்றாக ரத்து செய்யப்பட்டது. வகுப்புரிமை ஆணையும் ரத்து செய்யப்பட்டது.அரசியல் சாசன சட்டம் திருத்தி எழுதப்பட்ட பின் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் முஸ்லிம்கள் இணைக்கப்பட்டனர்.
Additional information
Weight | 85 g |
---|---|
Publisher | இலக்கியச்சோலை |
Author Name | நெ. முஹம்மது |