அழகிய துஆக்கள் மற்றும் ருக்யாக்கள்(பதிப்பு:ஜனவரி 2015) | Azhagiya Dua-kkal Matrum Ruqyakkal
₹100.00
1 in stock
Description
நாம் நமது தேவைகளை அழகிய வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பதும் அனுமதிக்கப்பட்டது தான். இருப்பினும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளில் வந்துள்ள துஆக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
பல அழகிய அற்புதமான பிரார்த்தனைகள் நபி மொழிகளில் காணக்கிடைக்கின்றன. அவற்றில் நமது தேவைகளும், கோரிக்கைகளும் சிறந்த முறையில் கூறப்பட்டிருப்பதால் ஒரு முஸ்லிம் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் மார்க்கத்தில் இல்லாத நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது உதாரணமாக, மார்க்கம் குறிப்பிடாத இடத்தையோ, நேரத்தையோ துஆவுக்காக குறிப்பாக்கிக் கொள்வது கூடாது.
தனது கவலையான அல்லது மகிழ்ச்சியான எந்த நேரத்திலும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அல்லாஹ்வின் மீது அன்போடும் ஆதரவோடும் பயத்தோடும் கேட்கப்படக்கூடிய நல்ல பிரார்த்தனைகள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுகின்றன.
ஆகவே, துஆக்கள் என்பது குர்ஆன். ஹதீஸில் சொல்லப்பட்ட தாகவோ வரம்பு மீறாத நல்ல வார்த்தைகளாகவோ இருக்க வேண்டும் மார்க்கத்தில் சொல்லப்படாத நிபந்தனைகளை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவை பித்அத் (அனாச்சாரம்) ஆகிவிடும். அனாச்சாரங்களை செய்வது மிகப்பெரிய குற்றமாகும்.
Additional information
Weight | 140 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | மற்றவை |