அருளும் அருளுக்குரியவர்களும் | Arulum Arulukkuriyavargalum
₹22.00
16 in stock
Description
பாவம் செய்வது, பாவத்திலிருந்து மீள்வது (தவ்பா) இவற்றினூடாக தொடர்ந்து இயங்குகிறது மனித வாழ்வு மீண்டும் மீண்டும் பாவம் செய்யும் மனித இயல்புக்கு அப்பாலிருந்து மனிதகுலத்தின் மீது விரிந்து படர்கிறது இறைவனின் எல்லையில்லாக் கருணை என்ன பாவம் செய்தாலும், எவ்வளவு பாவங்கள் செய்தாலும் மன்னிப்பதற்கு இறைவன் இருக்கிறான் எனும் கோட்பாடு ஒருபுறம்; மனிதன் பாவங்களின்பொதிமுட்டை, மரணம் மட்டுமே பாவத்தின் முடிவுரை எனும் கோட்பாடு இன்னொருபுறம் இந்த இரு வகையான எல்லைக் கோடுகளுக்கு இடையே தன் பாவத்தை உணர்ந்து, மனந்திருந்தி, அதிலிருந்து மீள வேண்டுமென்ற முனைப்புடன் ஒருவர் இறைவனை அணுகும்போது இறைவன் மகிழ்ச்சியடைகிறான் ஒருவர் தன் மரணத்தின் விளிம்பில் மேற்கொள்ளும் பாவமீட்சி கூட இறைவனுடைய அருளுக்கு அவரை முற்றிலும் தகுதியுடையவராக்குகிறது.
Additional information
Weight | 80 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | மௌலவி P.S. ரஃபீக் அஹ்மத் ரப்பானி |